Home இந்தியா அதிபர் பதவிக்கு தகுதியானவர் அத்வானி – நிதின் கட்காரி

அதிபர் பதவிக்கு தகுதியானவர் அத்வானி – நிதின் கட்காரி

630
0
SHARE
Ad

NITIN-GADKARIபுதுடில்லி, ஜூன் 23 – இந்தியாவின் அதிபராவதற்கு தகுதி படைத்தவர் பாஜக மூத்த தலைவர் அத்வானி என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது,

”பாஜக மூத்த தலைவர் அத்வானி ஏற்கனவே துணைப் பிரதமர் பதவியை வகித்ததால் மக்களவைத் தலைவர் பதவிக்கு அவரை நியமிப்பது சரியானதாக இருக்காது. அவரை நாங்கள் அனைவரும் மதிக்கிறோம். அத்வானியின் தகுதிக்கும் அரசியல் அனுபவத்திற்கும் உரிய பதவியை வழங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

75 வயதை கடந்தவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்க கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவெடுத்துள்ளார். பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப்பச்சன் தற்போது கதாநாயகனாக நடிக்க முடியாது. ஏனென்றால் தலைமுறை மாறிவிட்டது. அதே போன்றுதான் அமைச்சரவையும். புதியவர்களுக்கு வழி விடுவதற்காக இன்னும் 10 ஆண்டுகளில் நானும் மாற்றப்படலாம்.

#TamilSchoolmychoice

திட்ட கமிஷனின் துணை தலைவராக வேண்டும் என்று முரளி மனோகர் ஜோஷி விரும்புவதாக பத்திரிகைகளில் வெளியான செய்தியை மறுக்கிறேன். அவருடைய அறிவையும் அனுபவத்தையும் எங்களது கட்சி கண்டிப்பாக பயன்படுத்தி கொள்ளும்.

பிரதமரை பார்த்து அமைச்சர்கள் பயப்படுவதாக கூறுவதில் உண்மையில்லை. அமைச்சர்களின் கருத்துக்களை கேட்டு சிலவற்றை பிரதமர் ஏற்றுக் கொள்கிறார். ஒவ்வொரு பிரச்சனையையும் அவர் ஆழ்ந்து பார்ப்பதால் பிரதமரை கண்டுதான் துறைகளின் செயலாளர்கள் பயப்படுகின்றனர் என்று நிதின் கட்காரி அந்த பேட்டியில் தெரிவித்தார்.