புது டில்லி: நேற்று (செவ்வாய்க்கிழமை), இந்திய வான்படை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையோரம் நடத்தியத் தாக்குதலின் போது, குறைந்தபட்சம் 325 தீவிரவாதிகளும், 25 பயிற்றுனர்களும் பாலகோட் முகாமில் இருந்ததாக டைம்ஸ் அப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு லெஹ், ஜம்மு, ஸ்ரீநகர் மற்றும் பதான்கோட் விமான நிலையங்களில் உச்சக்கட்ட எச்சரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களால் ஏராளமான விமானப் பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானிய போர் விமானங்கள், இந்திய வான்பரப்பை மீறியதால் உடனடியாக இந்திய விமானங்கள் பின்வாங்கின என இந்திய வான்படைத் தெரிவித்தது.