Home இந்தியா பாகிஸ்தானின் எப்16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகக் கூறும் இந்தியா!

பாகிஸ்தானின் எப்16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகக் கூறும் இந்தியா!

738
0
SHARE
Ad

புது டில்லி: நேற்று (செவ்வாய்க்கிழமை), இந்திய வான்படை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையோரம் நடத்தியத் தாக்குதலின் போது, குறைந்தபட்சம் 325 தீவிரவாதிகளும், 25 பயிற்றுனர்களும் பாலகோட் முகாமில் இருந்ததாக டடைம்ஸ் அப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே, பாகிஸ்தானிய போர் விமானங்கள் இன்று புதன்கிழமை, இந்திய வான்பரப்பை மீறியதால், பாகிஸ்தானுக்குச் சொந்தமான எப்16 ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்தியா டுடே செய்தி நிறுவனம் பதிவிட்டிருக்கிறது.

இதற்கு மறுப்புக் கூறும் வகையில், பாகிஸ்தான் எல்லைக்குள் இரு இந்திய வான்படை விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுவிட்டதாகவும், இருவர் உயிர் இழந்த வேளையில், ஒருவரை பாகிஸ்தான் இராணுவம் கைது செய்துள்ளதாகவும் பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.