Home வணிகம்/தொழில் நுட்பம் ஏர் ஆசியா : 3 ஆண்டுகளில் முதன் முறையாக நஷ்டத்தைச் சந்திக்கிறது

ஏர் ஆசியா : 3 ஆண்டுகளில் முதன் முறையாக நஷ்டத்தைச் சந்திக்கிறது

1334
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஆசியா கண்டத்தின் ஆகப் பெரிய மலிவு விலை விமானப் பயண நிறுவனமான ஏர் ஆசியா, நாலாவது காலாண்டில் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. எரிபொருள் விலை உயர்வு காரணமாக இந்த நஷ்டம் ஏற்பட்டதாகவும், கடந்த மூன்றாண்டுகளில் ஏர் ஆசியா நஷ்டத்தை எதிர்நோக்குவது இதுவே முதன்முறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 372.6 மில்லியன் ரிங்கிட் இலாபத்தைச் சந்தித்த ஏர் ஆசியா இந்த முறை 395 மில்லியன் ரிங்கிட் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

ஒரு வணிக ஆய்வு மையம் ஏர் ஆசியா 63.2 மில்லியன் ரிங்கிட் நஷ்டத்தை எதிர்நோக்கும் எனக் கணித்திருந்த நிலையில், ஏர் ஆசியாவின் உண்மையான நஷ்டம் அந்தக் கணிப்பை விட பன்மடங்கு அதிகமானதாக அமைந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

இருப்பினும் கணக்காய்வுக்கு உட்பட்ட காலத்தில் ஏர் ஆசியாவின் மொத்த பயணிகள் எண்ணிக்கை 16 விழுக்காடு கூடி 12.1 மில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்தது.

அதன் வருமானமும் 6.2 விழுக்காடு அதிகரித்து 2.82 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்திருக்கிறது.