Home இந்தியா சிறைப்பிடிக்கப்பட்ட அபிநந்தன் விடுவிக்கப்படுகிறார்

சிறைப்பிடிக்கப்பட்ட அபிநந்தன் விடுவிக்கப்படுகிறார்

953
0
SHARE
Ad

புதுடில்லி – பாகிஸ்தான் நிலப்பகுதியில் விழுந்த இந்தியப் போர் விமானத்தின் விமானி அபிநந்தன் பாகிஸ்தான் இராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்துலக போர் தொடர்பிலான ஜெனிவா ஒப்பந்தங்களின்படி அவர் விடுவிக்கப்பட வேண்டுமென இந்தியா கடந்த இரண்டு நாட்களாக பாகிஸ்தானுக்குக் கடும் நெருக்கடி கொடுத்து வந்தது.

இதனைத் தொடர்ந்து நல்லெண்ண அடிப்படையிலும், இந்தியாவுடன் அமைதியை ஏற்படுத்தும் முறையிலும் அபிநந்தனை நாளை வெள்ளிக்கிழமை (மார்ச் 1) விடுவிக்கப் போவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

இந்தியாவின் தூதரக அளவிலான நடவடிக்கைகளுக்கும், உறுதியான நிலைப்பாட்டிற்கும் கிடைத்த வெற்றி இதுவென அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.