Home கலை உலகம் மணிரத்னம் தயாரிப்பில் விக்ரம் பிரபு!

மணிரத்னம் தயாரிப்பில் விக்ரம் பிரபு!

1291
0
SHARE
Ad

சென்னை: ‘கும்கி’ திரைப்படப் புகழ் விக்ரம் பிரபு சமீபக்காலமாக நடித்து வரும் திரைப்படங்கள் எதிர்பாத்த வெற்றியைத் தரவில்லை என்பதே உண்மை. இதற்கிடையே, பிரபல இயக்குனர் மணிரத்னம் தயாரித்து வரும் படத்தில் விக்ரம் பிரபு நடித்து வருவதாக செய்தி வெளியாகி உள்ளது.

மெட்ராஸ் டாக்கிஸ் எனும் மணிரத்னத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் இத்திரைப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், இத்திரைப்படம் மூலமாக தமிழ் திரைப்பட உலகில் இவருக்கு மீண்டும் வாய்ப்புகள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

இத்திரைப்படத்தில் இவருக்கு இணையாக மடோனா செபஸ்டியன் நடிக்க இருக்கும் வேளையில், முக்கியக் கதாபாத்திரத்தில், சகோதரியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.