அம்னோ உறுப்பினர்களுக்கு தேசிய முன்னணியை கலைப்பதற்கு எந்த விதத்திலும் சம்மதம் கிடையாது என அவர் தெரிவித்தார். தேசிய முன்னணியின் எதிர்காலத்தை கணித்து வைத்துள்ளதாகவும், அதற்காக பல்வேறு திட்டங்களையும் அவர்கள் தீட்டி வைத்திருப்பதாகவும் நஸ்ரி கூறினார்.
பிபிபி, கெராக்கான், மற்றும் சபாவில் உள்ள இதர கட்சிகள் தேசிய முன்னணியை விட்டு விலகியது போல, மசீசவும் விலகிக் கொள்ளலாம் என நஸ்ரி தெரிவித்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், செமினி சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, நஸ்ரியின் இனவாத உரையைக் குறித்து மசீச கடுமையாக சாடியிருந்தது.