Home இந்தியா “மனநல ரீதியாகத் துன்புறுத்தப்பட்டேன்” – விமானி அபிநந்தன்

“மனநல ரீதியாகத் துன்புறுத்தப்பட்டேன்” – விமானி அபிநந்தன்

995
0
SHARE
Ad
விமானி அபிநந்தனைச் சந்தித்து உரையாடிய நிர்மலா சீதாராமன்

புதுடில்லி – பாகிஸ்தானில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய போர் விமானி அபிநந்தன் வர்த்தாமன் இந்திய இராணுவத்திடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்னால், கட்டாயப்படுத்தி அவரது நடவடிக்கைகளை பாகிஸ்தான் இராணுவத்தின் காணொளி (வீடியோ) ஒன்றை எடுத்தனர் என இந்தியத் தரப்பு குற்றஞ் சாட்டியுள்ளது.

இந்தியா திரும்பிய அபிநந்தன் புதுடில்லியில் முழுமையான மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். அவரது உடலில் இரகசிய உளவுக் குருவிகளை எதனையும் பாகிஸ்தான் பொருத்தவில்லை என்பதைக் கண்டறிய அவரது உடல் முழுக்க எம்ஆர்ஐ (MRI) எனப்படும் மின்காந்தப் பதிவு படங்கள் எடுக்கும் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

எம்ஆர்ஐ பரிசோதனைகளின் மூலமாக அவ்வாறு உளவுக் கருவிகள் எதனையும் அவரது உடலில் பாகிஸ்தான் பொருத்தவில்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.

#TamilSchoolmychoice

உடல் ரீதியாக அபிநந்தன் துன்புறுத்தப்படவில்லை என்றாலும், மனநல ரீதியாக அவர் கடுமையான துன்புறுத்தலை பாகிஸ்தான் தரப்பிலிருந்து எதிர்நோக்கினார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்திய இராணுவத்தின் வசம் ஒப்படைக்கப்படுவதற்கு தாமதானதற்கு காரணம், அவரை பாகிஸ்தான் இராணுவம் கட்டாயப்படுத்தி காணொளி ஒன்றை எடுத்ததுதான் என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அபிநந்தனை கடந்த சனிக்கிழமை (மார்ச் 2) இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சென்று கண்டு நிலவரங்களைக் கண்டறிந்தார். அபிநந்தன் குடும்பத்தினருடனும் நிர்மலா சீதாராமன் அளவளாவினார்.