Home நாடு எம்ஏசிசி: பினாங்கு நீருக்கடி சுரங்கப்பாதை, 6 விசாரணை அறிக்கைகள் தொடங்கப்பட்டன!

எம்ஏசிசி: பினாங்கு நீருக்கடி சுரங்கப்பாதை, 6 விசாரணை அறிக்கைகள் தொடங்கப்பட்டன!

813
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பினாங்கு நீருக்கடி சுரங்கப்பாதை திட்டம் தொடர்பாக ஆறு விசாரணை அறிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்தது.

முதல் கட்ட விசாரணை அறிக்கை 2017-இல் ஆரம்பிக்கப்பட்டது எனவும், மேலும் ஐந்து விசாரணை அறிக்கைகள் 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகவும் அது தெரிவித்தது.

ஐந்து விசாரணை அறிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டு துணை பொது வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது எனவும், அவற்றில் மூன்று ஊழல் தடுப்பு ஆணைத்திடம் மேல் விசாரணைக்காக திரும்பக் கொடுக்கப்பட்டது எனவும் அது குறிப்பிட்டது.

#TamilSchoolmychoice

பினாங்கு நீருக்கடி சுரங்கப்பாதை திட்டத்தை குறித்து, இணையத்தள எழுத்தாளர் ராஜா பெத்ரா வெளியிட்ட பதிவுக்குப் பின்னர், ஊழல் தடுப்பு ஆணையம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.