இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தகவல் மற்றும் பண்பாட்டு அமைச்சர் பைசூல் ஹசான் சோஹான் இந்து மதம், மோடி மற்றும் இந்திய இராணுவத்தை இழிவாகப் பேசியதால் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்த விவகாரம் குறித்து, பைசூல் சோஹான் கூறியதாவது, தாம் பிரதமர் மோடியையும், இந்திய இராணுவத்தை மட்டும்தான் விமர்சித்தேன், இந்துக்களை அல்ல எனக் கூறினார். தவறு ஏற்பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் கூறியிருந்தார், ஆயினும், பிரதமர் இம்ரான் கான் உடனடியாக அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு உத்தரவிட்டார்.
பிடிஐ கட்சியைச் சேர்ந்த பைசூலுக்கு, அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள், மனித உரிமை அமைச்சர்களிடமிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன.