Home வணிகம்/தொழில் நுட்பம் புரோட்டோன்: எக்ஸ்70 அதிகமான விற்பனையை பதிவுச் செய்துள்ளது!

புரோட்டோன்: எக்ஸ்70 அதிகமான விற்பனையை பதிவுச் செய்துள்ளது!

799
0
SHARE
Ad
படம்: நன்றி பால்தான்

கோலாலம்பூர்: மலேசியாவின் முக்கிய மூன்று வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, புரோட்டோன், மீண்டும் அதிகமான விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.  இந்த செய்தியை புரோட்டோன் நிறுவனம் அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்துள்ளது.

2019-ஆம் ஆண்டுக்கான முதல் இரண்டு மாதங்களில் மட்டும், புரோட்டோன் வாகனங்களின் விற்பனை 42 விழுக்காடாக பதிவாகியுள்ளது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் 5,283 விற்பனை பதிவுகள் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், சமீபத்தில் வெளியான புரோட்டோன் எக்ஸ்70 வாகனத்திற்கு, பிப்ரவரி மாதம் மட்டும் 2,823 பதிவுகள் பெறப்பட்டதாக புரோட்டோன் தெரிவித்தது. அதிகமான அளவில் விற்பனையாகி வரும் எஸ்யூவி ரக வாகனங்களில் எக்ஸ்70 முதலிடம் பெற்றுள்ளது.

#TamilSchoolmychoice

இதுவரையிலும், 20,000 எக்ஸ்70 கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, சுமார் 6,927 எக்ஸ்70 கார்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன என புரோட்டோன் கூறியது.