Home நாடு கைவிடப்பட்ட வாகனங்கள் 33 நாட்களுக்குள் அகற்றப்படும்!

கைவிடப்பட்ட வாகனங்கள் 33 நாட்களுக்குள் அகற்றப்படும்!

842
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பயன்படுத்தப்படாத வாகனங்களினால் இனி மக்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. வருகிற ஜூலை மாதத்தில் கைவிடப்பட்ட வண்டி வாகன வழிகாட்டுதல் செயல்முறைத் திட்டம் அறிமுகப்படுத்திய பிறகு, புகார் கிடைக்கப்பெற்ற 33 நாட்களுக்குள் அவ்வாகனங்கள் அகற்றப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்த தெளிவான வழிகாட்டுதல்கள் மற்றும் செயல்முறை ஆவணங்களை வீடமைப்பு மற்றும் உள்ளூர் அரசாங்க அமைச்சு, தேசிய போக்குவரத்து மன்றத்திடம் வழங்கி உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்கள் ஏப்ரல் மாதத்தில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும். ஒருவேளை, ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஜூன் மாதம் உள்ளூர் அரசாங்கங்களுக்கு அவற்றை செயல்முறைப்படுத்த அனுமதி வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.