Home நாடு தேர்தல் ஆணையம்: தேர்தல் குற்றங்கள் குறித்த விசாரணைகளில் சம்பந்தம் இல்லை!

தேர்தல் ஆணையம்: தேர்தல் குற்றங்கள் குறித்த விசாரணைகளில் சம்பந்தம் இல்லை!

725
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேர்தல்களின் போது பெறப்பட்ட தேர்தல் குற்றங்கள் புகார்கள் குறித்த விசாரணைகளில் தேர்தல் ஆணையம் சம்பந்தபடவில்லை என தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் தெரிவித்தார். 

கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி மற்றும் செமினி சட்டமன்றத்தில் பெறப்பட்ட தேர்தல் குற்றங்கள் தொடர்பான எந்த ஓர் அறிக்கையையும் தேர்தல் ஆணையம் பெறவில்லை என அவர் தெரிவித்தார்.

அப்புகார்களை காவல் துறையினர் விசாரித்து வருவதாகவும், அவ்விசாரணைகள் குறித்த எந்த அறிக்கைகளும், தேர்தல் ஆணையத்திடம் இதுவரையிலும் கொடுக்கப்படவில்லை என அவர் கூறினார். புகார் அளித்தவர் அல்லது புகார்தாரர் மட்டுமே விசாரணைக் குறித்து கேள்விகள் எழுப்ப முடியும் என அவர் தெளிவுப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

நாங்கள் ஒரு மூன்றாம் தரப்பினராக மட்டுமே செயல்பட முடியும்” என அசார் தெரிவித்தார்.