Home நாடு “அம்னோ- பாஸ் கூட்டணி தேமுவுக்கு சாதகமானது!”- எஸ்.ஏ.விக்னேஸ்வரன்

“அம்னோ- பாஸ் கூட்டணி தேமுவுக்கு சாதகமானது!”- எஸ்.ஏ.விக்னேஸ்வரன்

1079
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ- பாஸ் கட்சியின் கூட்டணி ஒருபோதும் மஇகா மற்றும் மசீச கட்சிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என மஇகா கட்சித் தலைவர் எஸ்.ஏ விக்னேஸ்வரன் தெரிவித்தார். அவ்விரு கட்சிகளும் மலாய் சமூகத்தினரின் நலனில் அக்கறைக் கொண்டு செயல்படுவதோடு, தேசிய முன்னணியின் சாரத்தை புரிந்து செயல்படுவார்கள் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

நம்பிக்கைக் கூட்டணி கட்சிகளில் பெர்சாத்து, அமானா, ஜசெக போன்ற கட்சிகள் ஒன்றாக இணைந்து சேவையாற்றும் போது, ஏன் அம்னோ- பாஸ் கூட்டணியோடு இணைந்து மஇகா செயல்பட முடியாது என அவர் வினவினார்.

இந்த கூட்டணியால் மக்களின் செல்வாக்கையும், ஆதரவையும் பெற இயலும் என்றால், அதனை செயல்பட விடுவதே சரியான முடிவாக இருக்க முடியும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.