நாட்டில் மலாய்க்காரர்களை பிரதிநிதிக்கும் இரு பெரிய கட்சிகளான அம்னோ மற்றும் பாஸ் கூட்டு சேரும் போது, பலதரப்பட்ட மக்களின் நலனில் இனி முகியத்துவம் செலுத்தபடமாட்டாது என நஸ்ரி தெரிவித்தார். இவ்வாறான சூழலில் தேசிய முன்னணியின் இலக்கு இனி நடைமுறைக்கு ஏற்றதாக இருக்காது என அவர் தெரிவித்தார்.
தற்போதைய அரசியல் சூழலில் மலாய் முஸ்லிம்களின் நலனில் அக்கறை செலுத்துவதே சிறந்தது என அவர் கூறினார். அரசியலில் தமது எதார்த்தமான செயலைக் கண்டு பலர், தம்மை இனவெறியாளன் எனக் குறிப்பிடுவதை கண்டுக் கொள்ளப்போவதில்லை என நஸ்ரி தெரிவித்தார்.
“எனது கவனம் முழுக்க இனி மலாய்- முஸ்லிம்களின் நலனில்தான் இருக்கும்” என நஸ்ரி வெளிப்படையாகக் கூறியுள்ளார்.