Home உலகம் பாகிஸ்தானில் இந்திய நிகழ்ச்சிகள், திரைப்படங்களுக்கு தடை!

பாகிஸ்தானில் இந்திய நிகழ்ச்சிகள், திரைப்படங்களுக்கு தடை!

720
0
SHARE
Ad

இஸ்லாமாபாத்: இந்திய நாட்டில் தயாராகும் அனைத்து விதமான நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் பாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப அந்நாட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்ற நிலைக் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, பாலிவுட் திரைப்படங்கள் பாகிஸ்தான் திரையரங்குகளில் வெளியாகாது என அந்நாட்டு திரைப்பட ஒளிபரப்பு அமைப்பு அறிவித்திருந்தது. பாகிஸ்தான் மின்னூடக ஒழுங்குமுறை ஆணையத்தின் 2006-ஆம் ஆண்டு கொள்கைப்படி, உள்ளூர் அலைவரிசைகளில் 10 விழுக்காடு வெளிநாட்டு உள்ளடக்கங்களை ஒளிபரப்ப அனுமதி இருந்தது.

2016-ஆம் ஆண்டு பதான்கோட் தாக்குதலுக்குப் பிறகு, இந்திய நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப பாகிஸ்தான் மின்னூடக ஒழுங்குமுறை ஆணையம் ஒட்டுமொத்த தடை விதித்திருந்தது. பின்னர், அந்த தடைக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு, அது நீக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

அதே போல், கடந்த மாதத் தொடக்கத்தில், புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு பங்கு இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டி வருவதால், இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் நீடித்து வருகிறது. அதன் எதிரொலியாக இந்திய நாட்டின் நிகழ்ச்சிகள் ஒரு விழுக்காடுகூட பாகிஸ்தானில் ஒளிப்பரப்பப்படாது என மின்னூடக ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.