Home உலகம் டிரம்பின் முன்னாள் பிரசார மேலாளருக்கு 47 மாதங்கள் சிறைத் தண்டனை!

டிரம்பின் முன்னாள் பிரசார மேலாளருக்கு 47 மாதங்கள் சிறைத் தண்டனை!

714
0
SHARE
Ad

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முன்னாள் பிரச்சார மேலாளரான பால் மானபோர்ட்டுக்கு 47 மாத சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வரி மற்றும் வங்கி மோசடி தொடர்பாக நடந்த விசாரணையில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு விசாரணைகள் நடந்து வந்தன. விசாரணையின் முடிவில் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பால் மானபோர்ட் மீதான சட்டவிரோதமான கூட்டு நடவடிக்கை தொடர்பான வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரம் வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பால் மானபோர்ட் சட்டவிரோதமாக பெற்ற 24 மில்லியன் டாலர்களை திரும்பத் தருவதுடன், 50,000 டாலர்களை அபராதமாக செலுத்த வேண்டுமென்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

வெளிநாட்டு வங்கிக் கணக்கு மூலம் மான்போர்ட் 18 மில்லியன் டாலர் பணமோசடி செய்து, அதன் மூலம் சொத்துக்களையும் பொருட்களையும் வாங்கியது அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்து வந்த விசாரணையில் நிரூபிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

உக்ரைனில், ரஷ்ய ஆதரவு அரசியல்வாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக மான்போர்ட் மீது குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, டிரம்பின் பிரசார மேலாளர் பதவியிலிருந்து 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அவர் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.