Home இந்தியா அயோத்தி நில உரிமை வழக்கு: 3 பேர் அடங்கிய நடுவர்கள் குழு நியமனம்!

அயோத்தி நில உரிமை வழக்கு: 3 பேர் அடங்கிய நடுவர்கள் குழு நியமனம்!

799
0
SHARE
Ad

புது டில்லி: மூன்று பேர் அடங்கிய நடுவர்கள் குழு ஒன்று அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் தீர்வு காண்பதற்காக நியமுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மூவருமே தமிழ் நாட்டைச் சார்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில், இக்குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. இக்குழுவில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மற்றும் வழக்கறிஞர் ஶ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த வழக்கு சம்பந்தமான இம்மூவரின் நடவடிக்கைகளும் கேமரா மூலம் பதிவு செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. நடுவர்கள் குழுவின் எந்தவித உரையாடல் விவரங்களை செய்தியாக எந்தவொரு ஊடகங்களும் வெளியிடக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நடவடிக்கைகளின் போது ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், அக்குழுவினர் உச்ச நீதிமன்ற பதிவாளரை தொடர்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நான்கு வாரங்களுக்குள் குழுவினர் தங்கள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்எட்டு வாரங்களுக்குள் இக்குழுவினர் மொத்தமாக தங்களின் நடவடிக்கைகளை முடித்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

ஒருவேளை, இந்த பேச்சுவார்த்தைக்கு கூடுதல் உறுப்பினர்கள் தேவைப்பட்டால் அதனை அக்குழுவினரே நியமித்துக் கொள்ளலாம் என நீதிபதி உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.