Home கலை உலகம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் ஏப்ரலில் வெளியீடு!

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் ஏப்ரலில் வெளியீடு!

972
0
SHARE
Ad

சென்னை: நீண்ட நாட்களாக எப்போது வெளிவரும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த, நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இத்திரைப்படத்தின் பாடலொன்று இரு வருடத்திற்கு முன் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆயினும், இத்திரைப்படத்தின் வெளியீட்டில் காலத் தாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான இப்படம், பல்வேறு சிக்கல்களை சந்தித்து தற்போது ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் கூறியுள்ளார். மேலும், இத்திரைப்படத்தின் முன்னோட்டம் தயாராகி விட்டதாகவும், விரைவில் அதனை வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இத்திரைப்படத்தில், தனுஷ், மேகா ஆகாஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், இவர்களுடன், சசிகுமார், ராணாவும் நடித்துள்ளனர்.