Home One Line P2 சன்னி வக்ப் வாரியம் மட்டுமே மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய இயலும்!- இந்து மகாசபா...

சன்னி வக்ப் வாரியம் மட்டுமே மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய இயலும்!- இந்து மகாசபா வழக்கறிஞர்

930
0
SHARE
Ad

புது டில்லி: ர்ச்சைக்குரிய பாபர் மசூதிஅயோத்தி கோயில் நில விவகாரத்தில் அவ்விடத்தில் இந்து ஆலயம் கட்டப்படும் என்றும் இதன் மூலம் அவ்விடம் இந்து ஆலயத்திற்கு உரிமையானது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

மேலும், இன்னும் 3 மாதத்தில் புதிய அறவாரியம் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுஅந்த அறவாரியத்தின் மூலம் 5 ஏக்கர் மாற்று நிலம் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையேஇந்த நில விவகாரத்தில் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரப்படும்  என்று முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் கடந்த ஞாயிற்றுக்கிழமை  தெரிவித்திருந்ததுஒரு மாதத்திற்குள் மறு ஆய்வுமனு தாக்கல் செய்யப்படும் என்றும் அது தெரிவித்தது

#TamilSchoolmychoice

சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கரை ஒரு கோவிலுக்கு ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் மசூதிக்கு 5 ஏக்கர் நிலத்தை முக்கிய இடத்தை வழங்க உத்தரவிட்டதையும் குறிப்பிட்டு மசூதிக்கு பதிலாக எந்த நிலத்தை வழங்கினாலும் ஏற்க முடியாது என்று சட்ட வாரியம் குறிப்பிட்டிருந்தது.

இதனிடையே, இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மறு ஆய்வு தாக்கல் செய்தவர்களில் பட்டியலில் ஒருவராக இல்லாததால், அவ்வாரியம் அயோத்தி தீர்ப்பில் மறுஆய்வு மனு தாக்கல் செய்வதற்கு உரிமை இல்லை என்று வழக்கறிஞர் வருண் சின்ஹா தெரிவித்துள்ளார்

அகில இந்தியா முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்  மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்ய முடியாது, மாறாக சன்னி வக்ப் வாரியம் தான் மனுத்தாக்கல் செய்ய முடியும் என்று சின்ஹா தெரிவித்தார்

உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆராய்ந்துள்ளது. முஸ்லிம் அமைப்பினால் சர்ச்சைக்குரிய தளம் மற்றும் கட்டமைப்பினை தங்களின் பிரத்யேக உடைமையை நிறுவ முடியவில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளதுஎன்று சின்ஹா தெரிவித்துள்ளார்.