புது டில்லி: சர்ச்சைக்குரிய பாபர் மசூதி -அயோத்தி கோயில் நில விவகாரத்தில் அவ்விடத்தில் இந்து ஆலயம் கட்டப்படும் என்றும் இதன் மூலம் அவ்விடம் இந்து ஆலயத்திற்கு உரிமையானது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
மேலும், இன்னும் 3 மாதத்தில் புதிய அறவாரியம் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டு, அந்த அறவாரியத்தின் மூலம் 5 ஏக்கர் மாற்று நிலம் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த நில விவகாரத்தில் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரப்படும் என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. ஒரு மாதத்திற்குள் மறு ஆய்வுமனு தாக்கல் செய்யப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கரை ஒரு கோவிலுக்கு ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் மசூதிக்கு 5 ஏக்கர் நிலத்தை முக்கிய இடத்தை வழங்க உத்தரவிட்டதையும் குறிப்பிட்டு மசூதிக்கு பதிலாக எந்த நிலத்தை வழங்கினாலும் ஏற்க முடியாது என்று சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தின் தீர்ப்பை சவாலாக எடுத்து செய்யப்போவதில்லை என்றும், மாறாக சன்னி வக்ப் வாரியத்திற்கு (Sunni Waqf Board) இந்த நிலம் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வழக்கறிஞர்கள் மறு ஆய்வு மனுவை விரும்புகிறார்கள் என்றும் அச்சட்ட வாரியம் கூறியுள்ளது.