Home One Line P2 அயோத்தியா தீர்ப்பு : மசூதி அமைக்க 5 ஏக்கர் மாற்று நிலம் – சர்ச்சைக்குரிய இடம்...

அயோத்தியா தீர்ப்பு : மசூதி அமைக்க 5 ஏக்கர் மாற்று நிலம் – சர்ச்சைக்குரிய இடம் ராம்ஜென்ம பூமி நியாசுக்கு ஒதுக்கப்படுகிறது

1162
0
SHARE
Ad

புதுடில்லி – இன்று இந்திய நேரப்படி காலை 10.30 மணியளவில் தொடங்கிய இந்திய உச்ச நீதிமன்ற அமர்வில் அயோத்தியா பாபர் மசூதி வழக்கு மீதான இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்புக்கு முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் இதுவரை இல்லாத வரலாற்று நிகழ்வாக, உத்தரப் பிரதேசக் காவல் துறைத் தலைவரும், உத்தரப் பிரதேச மாநில அரசாங்கத் தலைமைச் செயலாளரும் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நீதிபதிகளுக்கு, விளக்கமளித்தனர்.

இந்தத் தீர்ப்பு குறித்த முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • இன்றைய தீர்ப்பு 5 நீதிபதிகளும் இணைந்து வழங்கிய  ஏகமனதான தீர்ப்பாகும்.
  • இந்த வழக்கின் 5 நீதிபதிகளில் ஒரு முஸ்லீம் நீதிபதியும் இடம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • தொல்லியல் துறையின் ஆய்வுகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளதாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அயோத்தியா ஆலயம் அமைந்துள்ள நிலப்பட்டாவை சட்டரீதியாகத்தான் அணுக முடியுமே, மத அடிப்படையிலும், மத நம்பிக்கையிலும் தீர்ப்பு வழங்க முடியாது. மதமும், மத நம்பிக்கைகளும் குறியீடுகளாகத்தான் பார்க்கப்பட வேண்டுமே தவிர, அதை வைத்து வழக்கின் முடிவை வழங்க முடியாது.
  • 2.77 சர்ச்சைக்குரிய இடத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலம் வரை இஸ்லாமிய மத வழிபாடுகள் (நமாஸ்) நடத்தப்பட்டதாக ஆதாரங்கள் இல்லை.
  • சர்ச்சைக்குரிய இடத்தில் வெளியே உள்ள 67 ஏக்கர் இடம் இந்துக்களின் ஆக்கிரமிப்பில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • 1992-இல் புதிய சிலைகள் வைக்கப்பட்டது, வழிபாட்டுத் தலம் உடைக்கப்பட்டது சட்டவிரோதமாகும்.
  • சர்ச்சைக்குரிய இடத்தில் இந்து ஆலயம் கட்டப்படும். இராமஜென்ம பூமி நியாசுக்கு வழங்கப்படும். இதன் மூலம் இந்த இடம் இந்து ஆலயத்திற்கு உரிமையானது என்பதை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
  • சர்ச்சைக்குரிய இடத்திற்கு வெளியே உள்ள இடமும் இந்துக்களுக்கு உரிமையானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • இன்னும் 3 மாதத்தில் புதிய அறவாரியம் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டு, அந்த அறவாரியத்தின் மூலம் 5 ஏக்கர் மாற்று நிலம் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
#TamilSchoolmychoice

(மேலும் விவரங்கள் தொடரும்)