Home இந்தியா அயோத்தியில் இராமர் ஆலயம் நிர்மாணிக்கப்படும் – 5 ஏக்கர் நிலத்தில் மசூதி நிர்மாணிக்கப்படும்

அயோத்தியில் இராமர் ஆலயம் நிர்மாணிக்கப்படும் – 5 ஏக்கர் நிலத்தில் மசூதி நிர்மாணிக்கப்படும்

1033
0
SHARE
Ad
சர்ச்சைக்குரிய பாபர் மசூதி

புதுடில்லி – சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் அயோத்தியா இடத்தில் இராமர் ஆலயத்தை நிர்மாணிக்கத் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், அடுத்த 3 மாதங்களுக்குள் அறவாரியம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாமியர்களுக்காக அயோத்தியில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை  மத்திய, மாநில அரசுகள் இஸ்லாமிய வக்பு சன்னி வாரியத்திற்கு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது.

அதே வேளையில் 1992-இல் மசூதி உடைக்கப்பட்டதும், புதிய சிலைகள் வைக்கப்பட்டதும் சட்டவிரோதமானது என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.