Home உலகம் எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியது

எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியது

1832
0
SHARE
Ad

அடிஸ் அபாபா (எத்தியோப்பியா) – எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரிலிருந்து கென்யாவின் தலைநகர் நைரோபி நோக்கிச் சென்று கொண்டிருந்து எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது.

இந்த போயிங் 737-800MAX  இரக விமானம் ET 302 என்ற வழித் தடத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது உள்ளூர் நேரப்படி காலை 8.38 மணிக்கு விமான நிலையத்துடனான தனது தொடர்பினை இழந்தது.

இந்த விமானத்தில் 149 பயணிகளும் 8 விமானப் பணியாளர்களும் பயணம் செய்து கொண்டிருந்தனர் என நம்பப்படுகிறது.

#TamilSchoolmychoice

அடிஸ் அபாபா நகரின் தென்கிழக்கு பகுதியில் இந்த விமானம் விழுந்திருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் உயிருடற் சேதம் குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.