Home கலை உலகம் இயக்குநர் மோகன் ராஜாவுடன் மீண்டும் கைகோர்க்கும் விஜய்

இயக்குநர் மோகன் ராஜாவுடன் மீண்டும் கைகோர்க்கும் விஜய்

1632
0
SHARE
Ad

சென்னை – இயக்குநர் அட்லீ இயக்கத்தில் தற்போது ‘தளபதி 63’ என்ற இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய்யின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

தளபதி 63 படம் தீபாவளிக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை மோகன் ராஜா இயக்குவார் என்ற தகவலை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. ஏற்கனவே ‘வேலாயுதம்’ படத்தில் விஜய் நாயகனாக நடிக்க மோகன் ராஜா இயக்கியுள்ளார். எனவே, அவர்கள் இணைவது இது இரண்டாவது முறையாகும்.

வழக்கமாக மற்ற மொழிகளில் வெளிவந்த வெற்றிப் படங்களைத் தழுவியே தமிழில் படங்களை எடுத்து வந்த மோகன் ராஜா ‘தனி ஒருவன்’ படத்தின் மூலம் தனது சொந்த, புதிய திரைக்கதை ஒன்றை வடிவமைத்து வெற்றி பெற்றார்.

#TamilSchoolmychoice

மோகன் ராஜா கடைசியாக இயக்கி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘வேலைக்காரன்’ சுமாரான வெற்றியையே பெற்றது.

தற்போது மீண்டும் விஜய்யுடன்  மோகன் ராஜா இணையும் படம் தமிழ்த் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.