Home இந்தியா இந்திய நாடாளுமன்றத் தேர்தல் : தமிழகத்தில் வாக்களிப்பு ஏப்ரல் 18 – முடிவுகள் மே 23!

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் : தமிழகத்தில் வாக்களிப்பு ஏப்ரல் 18 – முடிவுகள் மே 23!

1777
0
SHARE
Ad

புதுடில்லி – இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு தேதிகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை அறிவிக்கப்பட்டன.

ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கும் முதல் கட்டத் தேர்தல் தொடர்ந்து 7 கட்டங்களாக நடைபெற்று 7-வது கட்டத் தேர்தல் மே 19-ஆம் தேதி நடைபெறும்.

அதன்பின்னர் வாக்குகள் மே 23-ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.

#TamilSchoolmychoice

தமிழ் நாட்டுக்கான வாக்களிப்பு, இரண்டாம் கட்ட வாக்களிப்பாக ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும். வாக்களிப்புக்குப் பின்னர் சுமார் ஒரு மாதம் கழித்து மே 23-ஆம் தேதிதான் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.