Home இந்தியா அதிமுக – தேமுதிக தொகுதி உடன்பாடு கண்டன

அதிமுக – தேமுதிக தொகுதி உடன்பாடு கண்டன

1556
0
SHARE
Ad

சென்னை – (மலேசிய நேரம் இரவு 11.30 மணி நிலவரம்) இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை அறிவிக்கப்பட்டு ஓரிரு மணி நேர இடைவெளியில், கடந்த சில நாட்களாக இழுபறியாக நீடித்து வந்த அதிமுக – தேமுதிக இடையிலான தேர்தல் உடன்பாடு சுமுகமாகக் கையெழுத்தானது.

இந்த இரு கட்சிகளுக்கும் இடையிலான தேர்தல் உடன்பாட்டின்படி தேமுதிகவுக்கு 4 நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என முடிவாகியுள்ளது.

தேர்தல் திருவிழா களை கட்டத் தொடங்கியிருக்கும் நிலையில், இறுதிக் கட்டமாக அதிமுக-தேமுதிக தேர்தல் உடன்பாட்டைக் கண்டுள்ளது அதிமுகவுக்குக் கிடைத்திருக்கும் ஒரு வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.