தேசிய விமான நிறுவனத்தை மூடுவதென்பது ஒரு தீவிரமான விவகாரம் என்றுக் கூறிய பிரதமர், “முன்னதாக இதே போன்ற நிலைமை ஏற்பட்ட போது, இந்த நிறுவனத்தை அடைப்பது, விற்பது குறித்தும், நிதி மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டுமா என்றும் ஆராய்ந்தோம். தற்போது, அதே போன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆகவே, அரசாங்கம், நல்ல முடிவினை சிந்தித்து எடுக்கும்” என அவர் குறிப்பிட்டார்.
2014-ஆம் ஆண்டு தனியார்மயமாக்கலுக்குப் பின்னர் எம்ஏஎஸ் நிறுவனம் இழப்புகளை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Comments