Home கலை உலகம் மோடியின் டுவிட்டர் பதிவுக்கு, ஒரு விரல் புரட்சிப் பாடல் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானின் பதில்!

மோடியின் டுவிட்டர் பதிவுக்கு, ஒரு விரல் புரட்சிப் பாடல் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானின் பதில்!

1068
0
SHARE
Ad

சென்னை: இந்தியாவில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நாடெங்கிலும் களத்தில் இறங்கி போட்டியிட இருக்கும் கட்சிகள் தங்களின் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. வருகிற ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் விதிமுறைகளும் அமல்படுத்தப்பட்டன. மக்களவை தேர்தலில் 100 விழுக்காடு வாக்குப்பதிவுக்காக தேர்தல் ஆணையம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, பிரபல திரையுலகினர்களுக்கு தனது டுவிட்டர் பக்கத்திலிருந்து வேண்டுகோள் ஒன்றை வைத்து பதிவிட்டிருந்தார். பிரதமரின் வேண்டுகோளுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான், வருகிற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவில் நாம் செய்து காட்டுவோம் (We will Ji.. Thank you) எனக் குறிப்பிட்டிருந்தார்.

அவரது இந்த கருத்து, சமூக வலைத்தளங்களில் மோடிக்கு விடுக்கப்பட்ட எதிர்ப்பலையாக இருக்கலாம் எனப் பேசப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பாஜகவை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் உள்ள நிலையில், ரஹ்மானின் இந்த பதிலும் அதனைக் குறிப்பிட்டுதான் பேசுகிறது என பலர் கூறுகின்றனர்.

#TamilSchoolmychoice

மேலும், அவரது பதிலின் இறுதியில் இந்திய நாட்டின் கொடியையும் இணைத்துப் பதிவிட்டிருப்பதால், இந்திய மக்கள் அனைவரும் நாட்டின் மீது கொண்ட விசுவாசத்தின் பேரில், மாபெரும் மாற்றத்தை இந்தியா வருகிற தேர்தலில் சந்திக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது எனவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். சர்கார் திரைப்படத்தில்ஒரு விரல் புரட்சி’ பாடல் மூலம், தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் ஏ.ஆர். ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.