Home நாடு கிம் கிம் ஆறு: புகார் கிடைத்ததும் அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கினர், தாமதம் ஏற்படவில்லை!

கிம் கிம் ஆறு: புகார் கிடைத்ததும் அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கினர், தாமதம் ஏற்படவில்லை!

911
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: நச்சுப் பொருட்களால் மாசடைந்த கிம் கிம் ஆற்று நீரின் சுத்திகரிப்பு பணியின், முதல்நாளான இன்றுவியாழக்கிழமை, 2.43 டன் இராசயணக் கழிவுகள் சேகரிக்கப்பட்டதாக சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வேளாண்மை செயற்குழு உறுப்பினர் டாக்டர் ஷாருட்டின் ஜமால் கூறினார்.

இன்றுகாலை தொடங்கிய சுத்திகரிப்பு பணிகள் இன்றிரவு 11.00 மணியளவில் முடிவடையும் என்றார்.

மாநில அரசாங்கமும், சம்பந்தப்பட்ட முகவர்களும் சம்பவம் நடந்த இடத்திற்கு தாமதமாக சென்றனர் எனும் குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.

#TamilSchoolmychoice

காலை 5.15 மணி அளவில் ஆற்றில் இரசாயனக் கழிவுப்பொருட்கள் கலந்திருப்பது குறித்த புகார் வந்ததும், உடனடியாக மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, நடவடிக்கையில் இறங்கியது” என அவர் தெரிவித்தார்.

மேலும் காலை 9.30 மணியளவில், கழிவுப் பொருட்கள் வீசப்பட்டப் பகுதியைக் கண்டறிந்து, உடனடியாக துப்புரவு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன எனவும் அவர் விளக்கினார்.

இந்த நச்சுக் காற்று மற்றும் தூய்மைக் கேடு சம்பவத்தினால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள 111 பள்ளிகளை மூடுவதற்கு கல்வி அமைச்சு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கதுமேலும், இந்த உத்தரவு காலவரையின்றி நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தினால் தற்போது 975 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.