Home இந்தியா அதிமுக வேட்பாளர்கள் : யார், எங்கே போட்டி?

அதிமுக வேட்பாளர்கள் : யார், எங்கே போட்டி?

1492
0
SHARE
Ad

சென்னை – எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிடும் 20 நாடாளுமன்றத் தொகுதிகளின் உத்தேச வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் சில முக்கிய வேட்பாளர்கள் பின்வருமாறு:

  • கரூரில் மக்களவையின் துணை சபாநாயகர் தம்பிதுரை போட்டியிடுகிறார்.
  • புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அதிமுக கூட்டணி சார்பில் தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறார்.
  • தர்மபுரி நாடாளுமன்றத்தில் பாமக கட்சித் தலைவர் இராமதாசின் புதல்வர் அன்புமணி இராமதாஸ் போட்டியிடுகிறார்.
  • திருநெல்வேலி தொகுதியில் வழக்கறிஞரும் முன்னாள் அதிமுகவின் முக்கியப் புள்ளி பி.எச்.பாண்டியனின் புதல்வருமான மனோஜ் பாண்டியன் களமிறங்குகிறார்.
  • துணை முதல்வர் ஓ.பி.பன்னீர் செல்வத்தின் மகன் பி.ரவீந்திரநாத் குமார் அதிமுக சார்பில் தேனி நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
  • மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயகுமாரின் மகன் டாக்டர் விஷ்ணுவர்த்தன் தென் சென்னை நாடாளுமன்றத்தில் போட்டியில் குதிக்கிறார்.
  • கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி போட்டியிடுகிறார்.
  • தூத்துக்குடியில் பாஜக சார்பில் டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன் போட்டியிடுகிறார். திமுக சார்பில் கனிமொழி இங்கு போட்டியிடுவதால் நட்சத்திரத் தொகுதிகளில் ஒன்றாக தூத்துக்குடி மாறியிருக்கிறது.
  • பொன்.இராதாகிருஷ்ணன் பாஜக சார்பில் மீண்டும் கன்னியாகுமரியில் போட்டியிடுகிறார்.
  • சிவகெங்கை தொகுதியில் எச்.இராஜா போட்டியில் குதிக்கிறார். காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவார் என்பதால் மற்றொரு நட்சத்திரத் தொகுதியாக உருமாறுகிறது சிவகெங்கை.