Home நாடு லொம்போக்: சின் சியூ துணைத் தலைமை ஆசிரியர் உட்பட மேலும் ஒரு மலேசியர் மரணம்!

லொம்போக்: சின் சியூ துணைத் தலைமை ஆசிரியர் உட்பட மேலும் ஒரு மலேசியர் மரணம்!

760
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்று இந்தோனிசியா லொம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக, தியூ கெலெப் செனாரு நீர்வீழ்ச்சி பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு மலேசியர் இருவர் மாண்டதாகக் கூறப்படுகிறது. சின் சியூ சீன நாளிதழலின் துணைத் தலைமை ஆசிரியர், டத்தின் தாய் சியூ கிம் இந்த சம்பவத்தில் காலமானதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தோனிசியாவின் செய்தி நிறுவனமான அந்தாராவின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவரின் சடலம் சிதைவுகளில் சிக்கி புதைக்கப்பட்டுள்ளதாக மீட்பு குழுவால் அடையாளம் காணப்பட்டுள்ளது என தெரிவித்தது. இச்சம்பவத்தில் அதிகமான மலேசியர்களும் வெளிநாட்டவர்களும் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

நேற்று மதியம் 2:07 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 5.8 ரிக்டராகப் பதிவானது. அச்சம்பவத்தின் போது சுமார் 22 மலேசியர்கள் தியூ கெலெப் செனாரு நீர்வீழ்ச்சிப் பகுதியில் இருந்ததாக பயண முகவர் ஒருவர் கூறினார்.   

#TamilSchoolmychoice

இதற்கிடையே, மேலும் ஒரு மலேசியரின் உடல் கண்டெடுக்கப்பட்டு விட்டதாகவும், அவர் லிம் சாய் வா எனும் ஒரு பெண் என்றும், அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்தோனிசிய மீட்புக் குழு தெரிவித்துள்ளது.

இந்த சமீபத்தில் தற்போதைக்கு  மூன்று பேர் கொல்லப்பட்டனர் என்றும், அவர்களில் இருவர் மலேசியர்கள் எனவும் இந்தோனிசிய மீட்பு குழு தெரிவித்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் கிட்டத்தட்ட 500 வீடுகள் தரைமட்டமாகின என குறிப்பிடப்பட்டுள்ளது.