Home நாடு ஜோகூர் சுல்தானின் தாயார் காலமானார்!

ஜோகூர் சுல்தானின் தாயார் காலமானார்!

1054
0
SHARE
Ad
படம்: நன்றி சுல்தான் ஜோகூர் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம்

ஜோகூர் பாரு: ஜோகூர் சுல்தானின் தாயார், தெங்கு புவான் சானாரியா அல்மார்ஹும் தெங்கு அகமட் இன்று திங்கட்கிழமை காலமானார்.

அவருக்கு வயது 78. சுல்தான் இப்ராகிமின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், அவரது தாயாரின் மரணம் குறித்தப் பதிவு காலை 8:15 மணியளவில் வெளியிடப்பட்டிருந்தது.

முன்னாள் ஜோகூர் சுல்தானான, சுல்தான் இஸ்காண்டார் சுல்தான் இஸ்மாயிலின் மறைவுக்கு முன்னதாக,  தெங்கு புவான் சானாரியா, ஜோகூரின் சுல்தானாவாக பதவியில் இருந்தார்.

#TamilSchoolmychoice

சுல்தானின் மறைவுக்குப் பின்னர், ஜோகூர் மாநில அரசாங்கம் அவருக்கு, ஜோகூர் துங்கு புவான் எனும் பட்டத்தை வழங்கியது.

அவரது நல்லுடல், இன்று மதியம், மஹமூடியா ராயல் மாளிகையில் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.