Home நாடு நஜிப், வேண்டுமனே வழக்குகளில் இழுபறி நிலையை உண்டாக்குகிறார்!- டோமி தோமஸ்

நஜிப், வேண்டுமனே வழக்குகளில் இழுபறி நிலையை உண்டாக்குகிறார்!- டோமி தோமஸ்

867
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தம்மீது சுமத்தப்பட்ட குற்றவியல் வழக்கின் விசாரணையை ஒத்திவைப்பதற்காக பல்வேறு தந்திரங்களை, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் பயன்படுத்தி வருவதாக அசராங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் தெரிவித்தார்.

அமர்வு நீதிமன்றத்திலிருந்து உயர் நீதிமன்றத்திற்கு தமது வழக்கினை மாற்றக் கோரிய அனுமதி சான்றிதழை திரும்பப் பெற உதரவிட்ட உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, மீண்டும் அதற்கான மேல்முறையீட்டு மனுவை சமர்ப்பித்ததை டோமி சுட்டிக் காட்டினார்.

எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் சென்ரெடியான் பெர்ஹாட் தொடர்பான ஏழு குற்றவியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உயர் நீதிமன்ற தீர்ப்பைத் தள்ளுபடி செய்ய வேண்டி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையிட்டிருப்பதும் இதில் அடங்கும் என அவர் தெரிவித்தார்.