Home நாடு எம்ஏஎஸ் நிறுவனத்தை அரசாங்கம் காப்பாற்ற இயலாது!- பிரதமர்

எம்ஏஎஸ் நிறுவனத்தை அரசாங்கம் காப்பாற்ற இயலாது!- பிரதமர்

791
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசிய தேசிய விமான நிறுவனமான, மலேசிய ஏர்லைன்ஸ் (எம்ஏஎஸ்) மீதான தமது விருப்பத்தைப் புலப்படுத்திய பிரதமர் மகாதீர் முகமட், தற்போது அந்நிறுவனத்தைக் காப்பாற்ற முடியாத சூழலில் அரசாங்கம் இருப்பதாகத் தெரிவித்தார்.

எனவே, அந்நிறுவனத்தை விற்கலாமா இல்லையா என்பதை அரசாங்கம் ஆராய்ந்துக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

எம்ஏஎஸ் நிறுவனத்தை வாங்குவதற்கு சில தரப்புகள் விருப்பம் கொண்டுள்ளதாகவும், அவற்றையும் ஆராய்ந்த, பின்னரை அறிவிக்க இயலும் எனக் கூறினார். 

#TamilSchoolmychoice

முன்னதாக, எம்ஏஎஸ் நிறுவனத்தை அரசாங்கத்தின் கீழ் வைத்திருக்கக் கோரி, முன்னாள் எம்ஏஎஸ் நிருவாகத்தினர் குறிப்பிட்டிருந்தனர்.

எம்ஏஎஸ்சின் பல விமானங்கள் முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்ற காரணத்தால்தான், அந்நிறுவனம் இழப்புக்களை சந்திக்க நேரிட்டது என பிரதமர் குறிப்பிட்டார்.