Home Video ‘கெ13’: உளவியல், மர்மம் சார்ந்த படம்!

‘கெ13’: உளவியல், மர்மம் சார்ந்த படம்!

1100
0
SHARE
Ad

சென்னை: பரத் நீலகண்டன் இயக்கியத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கெ13’. இத்திரைப்படத்தில் நடிகர் அருல்நிதி முக்கியப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபக்காலமாக மாறுபட்ட திரைக்கதைகளை தேர்த்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் அருல்நிதியும் ஒருவர். அவரது முந்தையப் படங்கள் பொதுவான தமிழ் திரைப்படக் கதைகளுக்குள் சிக்காமல் தனியே அமைந்திருக்கும். ‘கெ13’ திரைப்படமும் அவ்வாறே அமைந்துள்ளது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தனித்துவமான தலைப்பைப் பற்றி இயக்குனர் பரத் நீலகண்டனிடம் வினவிய போது, “இது ஓர் உளவியல் சார்ந்த கதையாக இருக்கும்” எனக் கூறினார். பொதுவில், இத்திரைப்படம் மர்மம் நிறைந்த திரைப்படமாக அமையும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.

இத்திரைப்படத்தில் அருல் நிதியுடன் ஷார்தா ஶ்ரீநாத் இணையும் வேளையில்,  யோகி பாபு, மதுமிதா மற்று ரிஷிகாந்த் ஆகியோரும் நடிக்கின்றனர். இதற்கிடையே, இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி அண்மையில் வெளியானது. கீழ்காணும் இணைப்பில் அதனைக் காணலாம்: 

#TamilSchoolmychoice