Home நாடு கிம் கிம் ஆறு முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுவிட்டது!

கிம் கிம் ஆறு முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுவிட்டது!

962
0
SHARE
Ad

பாசிர் கூடாங்: இராசயனக் கழிவுப் பொருட்களால் மாசடைந்திருந்த கிம் கிம் ஆற்றுப் பகுதியை முழுவதுமாக சுத்தம் செய்து விட்டதாக எரிபொருள், அறிவியல், தொழில்நுட்ப, பருவநிலை மாற்ற, சுற்றுச்சூழல் அமைச்சர் இயோ பீ யின் நேற்று செவ்வாய்க்கிழமை கூறினார். 

முழுமையான சுத்திகரிப்பு நடவடிக்கையை மேற்கொண்ட பிறகு இந்த அறிவிப்பு செய்யப்பட்டதாக அவர் கூறினார். ஆயினும், அப்பகுதியை சுற்றியும் உள்ள நீர் மற்றும் காற்றின் தரம் சுத்தமாக இருப்பதை உறுதி செய்வதற்காக அடுத்த 25 நாட்களுக்குத் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், மார்ச் 13-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த சுத்திகரிப்பு நடவடிக்கையில் இதுவரையிலும், 900 மெட்ரிக் டன் கழிவுப்பொருட்களும், 1,500 மெட்ரிக் டன் மாசுபட்ட தண்ணீரும் அகற்றப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.

#TamilSchoolmychoice

இப்பகுதியில் முழுமையாக எல்லா நடவடிக்கைகளும் இன்று புதன்கிழமை நிறைவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.