Home நாடு கஞ்சா இலை விவகாரம் தற்போதைக்கு ஏற்புடையதல்ல!

கஞ்சா இலை விவகாரம் தற்போதைக்கு ஏற்புடையதல்ல!

682
0
SHARE
Ad

ஷா அலாம்: உலகிலேயே பெரிய அளவிலான கஞ்சா இலை ஏற்றுமதி மாநிலமாக சிலாங்கூரை மாற்றுவதற்கான பரிந்துரையை சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி நிராகரித்தார்.

தற்போதைக்கு, அதற்கான தேவை அவரம் இல்லை என்றும், இன்னும் கஞ்சா ஓர் ஆபத்தான போதை மருந்து சட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டு இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த விவகாரத்தில் தெளிவான ஆராய்ச்சியும், கட்டுபாடும் தேவைபடுகிறது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

நேற்று புதன்கிழமை ஜெராம் சட்டமன்ற உறுப்பினர், முகமட் ஷாயிட் ரொஸ்லி, சிலாங்கூரை உலகின் மிகப்பெரிய கஞ்சா ஏற்றுமதியாளராக்கும் பரிந்துரையை முன்வைத்தார்.