இந்தநாட்டின்பாதுகாப்பினை உறுதிபடுத்தும் காவல் படைக்குத் தேவையான உபகரணங்களை செய்து தருவதில் அரசாங்கம் முனைப்போடு செயல்படும் எனக் கூறினார்.
உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின், தேசிய தலைமைச் செயலாளர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் பாகார், மற்றும் அரசாங்க வழக்கறிஞர் தலைவர் டோமி தோமஸ் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
தற்போதைய சூழல்களின்படி காவல் துறையினர் வழக்கமான சவால்களையும், குற்றம் சூழல்களையும் மட்டும் சந்திப்பதில்லை, சில நேரங்களில் அசாதாரண மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல் போன்ற சூழல்களையும் எதிர்கொள்கின்றனர் என பிரதமர் குறிப்பிட்டார்.
மலேசிய மக்கள் அனைவரும் காவல் துறைரியினருக்கு பக்கபலமாக இருந்து பல்வேறு குற்றங்களை முறியடிக்கும் அவர்களின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.