Home நாடு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நம்பிக்கைக் கூட்டணி தோல்வி!

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நம்பிக்கைக் கூட்டணி தோல்வி!

716
0
SHARE
Ad

மாராங்: எல்லா விவகாரங்களிலும் அப்போதைய நடப்பு அரசாங்கமான தேசிய முன்னணியின் குறைகளையே சுட்டிக் காட்டி, அவர்களை குறை சொல்வதை விடுத்து, நாட்டு மக்களுக்கு நம்பிக்கைக் கூட்டணி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், நடப்பு அரசாங்கம் முனைப்புக் காட்ட வேண்டும் என பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறினார்.

நம்பிக்கைக் கூட்டணி அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தோல்வி கண்டுள்ளது என அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

நம்பிக்கைக் கூட்டணி அரசிடம் பல்வேறு குறைகள் இருப்பதாகவும், அவற்றில் ஒன்றான, உயர் கல்வி நிதி கடனை அகற்றுவோம் என வாக்குறுதி கொடுத்ததை மாதிரியாகக் காட்டினார். பொதுத் தேர்தலுக்கு முன், முழுமையாக பிடிபிடிஎன் கடனை அகற்றி விடுவோம் எனக் கூறிய அதே கூட்டணி, தற்போது அதனிலிருந்து பின்வாங்கி உள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். எதற்கு எடுத்தாலும், முந்தைய அரசாங்கம்  ஏற்படுத்திய கடனால் செய்ய இயலவில்லை எனும் காரணத்தை மட்டும் முன் வைக்கிறார்கள் என அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

அவரைப் பொறுத்தவரையில், இருக்கப்பட்ட மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரிகளை வைத்து இலவச கல்வியை தர இயலும் எனக் குறிப்பிட்டிருந்தார்.