Home நாடு மத்தியத்தில் உள்ள பிரச்சனைகளில் அஸ்மினின் கவனம் இருக்க வேண்டும்!- அன்வார்

மத்தியத்தில் உள்ள பிரச்சனைகளில் அஸ்மினின் கவனம் இருக்க வேண்டும்!- அன்வார்

1149
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னதாக நம்பிக்கைக் கூட்டணி அரசு, அதன் உண்மைத் தன்மையை இழந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டிய நூருல் இசாவின் கருத்துக்கு பிகேஆர் கட்சித் தலைவர் அஸ்மின் அலி, இசாவை நகைத்தபடி டுவிட்டர் பதிவொன்றை பதிவுச் செய்திருந்தார்.

இது குறித்து, பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் வினவியபோது, இந்த விவகாரத்தில் அஸ்மின் அமைதியைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அவர் அமைதியாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மத்தியத்தில் இருக்கிற பிரச்சினைகளில் அவரது கவனம் இருக்க வேண்டும்” என அன்வார் கூறினார்.

#TamilSchoolmychoice

சிலர் எக்காரணத்திற்கும் தங்களுக்கான கொள்கைகள் மற்றும் நிலைப்பாட்டில் எந்தவித சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள். மேலும் சிலர், எந்த வழியிலாவது தங்களைக் காப்பாற்றிக் கொள்ள மட்டுமே சிந்திப்பார்கள். ஆக, இதனை நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்என்று அவர் செய்தியாளர்களிடம் நாடாளுமன்ற வளாகத்தில் கூறினார்.

சிங்கப்பூர் ஊடகத்தினுடனான நேர்காணலின் போது, நுருல் இசா, தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக பேசியது நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்பேட்டியில் அவர் பிரதமர் மகாதீரை சர்வதிகாரி என்று குறிப்பிட்டிருந்தார்.