Home இந்தியா டிடிவி தினகரனுக்கு ‘குக்கர்’ சின்னம் மறுப்பு!

டிடிவி தினகரனுக்கு ‘குக்கர்’ சின்னம் மறுப்பு!

797
0
SHARE
Ad

சென்னை: அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், முன்னதாக அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ‘குக்கர்’ சின்னத்தை, தேர்தல் ஆணையம் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். ஆயினும், ‘குக்கர்’ சின்னத்தை வழங்க இயலாது என உச்சநீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

அமமுக பதிவுச் செய்யப்படாத கட்சி என்றபடியால், அக்கட்சிக்கு பொதுவான சின்னத்தையும் வழங்க இயலாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இது குறித்து கருத்துரைத்த நீதிமன்றம், பொதுச் சின்னத்தின் கீழ் போட்டியிட வேண்டும் என்ற அமமுகவின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, தேர்தல் ஆணையம், அதிமுக பெயர் மற்றும் இரட்டை இலை சின்னத்தை, ஓபிஎஸ்- ஈபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கியதை எதிர்த்து டிடிவி தினகரன் வழக்கு தொடுத்திருந்தார். ஆயினும், தேர்தல் ஆணையத்தின் அந்த முடிவு செல்லும் என டெல்லி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.