Home உலகம் பிரெக்சிட்: நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்டுப்பாட்டில் பிரிட்டன் நாடாளுமன்றம்!

பிரெக்சிட்: நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்டுப்பாட்டில் பிரிட்டன் நாடாளுமன்றம்!

879
0
SHARE
Ad

பிரிட்டன்: பிரிட்டன் பிரதமர் தெரெசா மே தலைமைக்கு எதிரானதாக பார்க்கப்படும் பிரெக்சிட் மசோதாவிற்கு ஆதரவாக 329 வாக்குகளும், எதிராக 302 வாக்குகளும் பதிவாகி உள்ள வேளையில், பிரட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்தை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதன் மூலம், நாளை புதன்கிழமை நடைபெற இருக்கும், பிரிட்டனின் நாடாளுமன்ற கூட்டத்தில் பிரெக்சிட் தொடர்பாக உள்ள சாத்தியக் கூறுகள் குறித்து அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களே விவாதித்து இறுதி முடிவுக் கூறுவார்கள் எனக் கூறப்படுகிறது.

ஆயினும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வது தொடர்பாக எவ்வித உத்தரவாதத்தையும் அளிக்க இயலாது என பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

பிரெக்சிட் விவகாரத்தில் அரசாங்கம் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கன்சர்வேட்டிவ் மற்றும் தொழிலாளர் கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.