கோலாலம்பூர்: பிஏசி தலைவர் பதவியிலிருந்து ரொனால்ட் கியாண்டி உடனடியாக விலக வேண்டும் என முன்னாள் பெர்சே தலைவரான அம்பிகா சீனிவாசன் மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளார்.
“எம்மாதிரியான விவகாரங்கள் பிஏசியில் விசாரிக்கப்பட்டு வந்தாலும், அதனை கியாண்டி அக்குழுவில் இருந்து கொண்டு விசாரணைகளில் ஈடுபடலாம். ஆனால், தலைவர் பொருப்பிலிருந்து அல்ல” என அம்பிகா கூறினார். இந்த விவகாரத்தில் பாரபட்சமே பார்க்கக் கூடாது என அம்பிகா வலியுறுத்தியுள்ளார்.
கியாண்டி தேசிய முன்னணியுடன் இருக்கும் போது அப்பதவியை ஏற்றிருந்தார். தற்போது, அவர் பெர்சாத்து கட்சியில் இணைந்துள்ளதைக் குறிப்பிட்டுக் காட்டிய அம்பிகா, உண்மை நிலவரம்படி, அந்தப் பதவி எதிர்க்கட்சியினருக்கு செல்ல வேண்டும் எனக் கூறினார். அதுதான் நம்பிக்கைக் கூட்டணி செய்து தந்த வாக்குறுதி என குறிப்பிட்டார்.
இதனிடையே, தகுதியான வேட்பாளரை அடையாளம் காணும் வரை கியாண்டியே அப்பதவியில் நிலைத்திருப்பார் என பிரதமர் கூறியிருந்தார். இதற்கு, எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணமாக, எதிர்க்கட்சியினர் அக்குழுவை விட்டு விலகுவதாக நேற்று திங்கட்கிழமை அறிவித்தனர்.