Home வணிகம்/தொழில் நுட்பம் அஸ்ட்ரோ இலாபம் 35 விழுக்காடு சரிவு

அஸ்ட்ரோ இலாபம் 35 விழுக்காடு சரிவு

886
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்த அளவிலான இலாபத்தை அஸ்ட்ரோ தொலைக்காட்சி நிறுவனம் சந்தித்துள்ளது.  ஜனவரி 31, 2019-இல் முடிவடைந்த நான்காவது காலாண்டில் 118.4 மில்லியன் ரிங்கிட் இலாபத்தை மட்டுமே அஸ்ட்ரோ ஈட்டியிருக்கிறது.

இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 35 விழுக்காடு சரிவாகும். எனினும் அஸ்ட்ரோவின் வருமானம் நிலையாக 1.368 பில்லியன் ரிங்கிட் என்ற அளவில் இருந்து வருகின்றது.

இதைத் தொடர்ந்து தனது வணிக வியூகங்களை மாற்றியமைக்க அஸ்ட்ரோ எண்ணம் கொண்டுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் 2020 ஜனவரி 31-ஆம் தேதியோடு முடிவடையும் அடுத்த நிதியாண்டு அஸ்ட்ரோவுக்கு மிகவும் சவாலாக காலகட்டமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.

அஸ்ட்ரோவைப் பயன்படுத்தும் தனிநபர் பயனர் ஒருவர் மூலம் 99.9 ரிங்கிட்டை அஸ்ட்ரோ ஈட்டியதன் மூலமும், விளம்பரங்களின் மூலமும் அதன் வருமானம் நிலையாக இருந்தாலும், தொலைக்காட்சி உள்ளடக்கங்களைப் பெறுவதற்காகச் செலுத்தப்படும் கட்டணங்கள் விலை உயர்ந்த காரணத்தால் அதன் செலவினங்களும் அதிகரித்து அதனால் அதன் இலாப அளவும் பாதிக்கப்பட்டிருக்கிறது என்றும் அஸ்ட்ரோ தெரிவித்துள்ளது.

தற்போது 5.7 மில்லியன் மலேசிய இல்லங்களைச் சென்றடையும் அஸ்ட்ரோ 23 மில்லியன் தனிநபர் பயனர்களைக் கொண்டிருக்கிறது.