Home இந்தியா ஜெயப்பிரதா ராம்பூரில் போட்டி

ஜெயப்பிரதா ராம்பூரில் போட்டி

729
0
SHARE
Ad

புதுடில்லி – உத்தரப் பிரதேசத்தில் சமஜ்வாடி கட்சியின்வழி அரசியல் நடத்திவந்த நடிகை ஜெயப்பிரதா அந்தக் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்ததைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அவரை எதிர்த்து சமஜ்வாடி கட்சியின் அசாம் கான் போட்டியிடுகிறார்.

56 வயதான ஜெயப்பிரதா ஏற்கனவே ராம்பூர் தொகுதியில் இருந்து இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவராவார்.

#TamilSchoolmychoice

1980-ஆம் ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, இந்திப் பட இரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் ஜெயப்பிரதா.

தமிழில் சலங்கை ஒலி, 47 நாட்கள், நினைத்தாலே இனிக்கும், போன்ற படங்களில் நடித்து தமிழ் இரசிகர்களைக் கவர்ந்த ஜெயப்பிரதா, அண்மையில் கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தில் நடித்திருந்தார்.