Home நாடு மலேசிய நண்பன் ஈப்போ நிருபர் ப.சந்திரசேகரன் காலமானார்

மலேசிய நண்பன் ஈப்போ நிருபர் ப.சந்திரசேகரன் காலமானார்

1749
0
SHARE
Ad

ஈப்போ – நீண்ட காலமாக பல்வேறு நாளிதழ்களில் ஈப்போ வட்டார நிருபராகப் பணியாற்றி வந்திருக்கும் பிரபல பத்திரிக்கையாளர் ப.சந்திரசேகரன் (படம்) இன்று செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 62.

அண்மைய சில ஆண்டுகளாக அவர் மலேசிய நண்பன் நாளிதழின் ஈப்போ வட்டார நிருபராக பணியாற்றி வந்தார்.

பேராக் மாநிலத்தின் பொது இயக்கங்களின் தலைவர்கள், அரசியல் தலைவர்களிடையே நன்கு அறிமுகமான சந்திரசேகரன் இன்று பிற்பகல் 1.30 மணியளவில், ஈப்போ லிம் கார்டன் இல்லத்தில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.

#TamilSchoolmychoice

30 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத் துறை அனுபவம் கொண்ட சந்திரசேகரனின் மனைவி ஏற்கனவே காலமாகி விட்டார். அவருக்கு ஒரு மகனும் இரண்டு புதல்விகளும் உள்ளனர்.

மறைந்த சந்திரசேகரனின் இறுதிச் சடங்குகள் நாளை புதன்கிழமை 27 மார்ச் 2019-ஆம் நாள் நண்பகல் 12.00 முதல் பிற்பகல் 2.00 மணிவரை கீழ்க்காணும் முகவரியில் நடைபெறும்:

எண்: 67, ஜாலான் லாப்ரூய்

மெர்டேக்கா கார்டன்

30100, ஈப்போ

No. 67, Jalan Labrooy,

Merdeka Garden,

30100, Ipoh

அதன்பின்னர் அன்னாரின் நல்லுடல் கெக் லுக் சியா மயானத்திற்குக் (பெர்ச்சாம்) கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

மேல்விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள:

திருநாவுக்கரசு சந்திரசேகரன் (புதல்வர்)

செல்பேசி எண்: 016-5447663