Home நாடு ஜோ லோ வீட்டின் நுழைவாயிலில் ஒட்டப்பட்ட அறிவிப்பை காணவில்லை!

ஜோ லோ வீட்டின் நுழைவாயிலில் ஒட்டப்பட்ட அறிவிப்பை காணவில்லை!

1171
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: தஞ்சோங் பூங்காவில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜோ லோவின் மூன்று மாடி சொகுசு வீடு, காவல் துறையினரால் கடந்த வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. புக்கிட் அமானின் பண மோசடி மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு அதிகாரிகள் வியாழனன்று 15 மில்லியன் விலைமதிப்புள்ள அந்த வீட்டைப் பறிமுதல்  செய்த அறிவிப்பு அறிக்கையை வெளியிட்டிருந்தனர்.

ஆயினும், தற்போது, அவ்வீட்டின் முன், அந்த அறிக்கையானது காணாமல் போனது குறித்து தேசிய வழக்கறிஞர் மன்றம் குழப்பத்தில் உள்ளது.

கடந்த வியாழனன்று தஞ்சோங் பூங்காவில், ஜோ லோவின் சொகுசு வீட்டின் நுழைவாயிலில் தெளிவாக அறிவிக்கப்பட்டிருந்த அந்த அறிவிப்பை அகற்றுவதற்கு வழக்கறிஞர் மன்றம் எந்த விதத்திலும் பொறுப்பல்ல எனக் குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

நாங்கள் வெளியிட்ட அறிக்கையை ஏன் நாங்களே அகற்ற வேண்டும்? இந்த விசயம் குறித்து இன்னமும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது” என மன்ற அதிகாரி ஒருவர் கூறினார்.

அகற்றப்பட்ட அறிவிப்புக்கு மாறாக மற்றொரு அறிவிப்பு வெளியிடப்படுமா என வினவிய போது, அது குறித்து இன்னும் விவாதித்து வருவதாக அவர் கூறினார்.