Home நாடு கூட்டரசு நீதிமன்றம்: நஜிப் மீதான 42 மில்லியன் ரிங்கிட் வழக்கை தொடங்க உத்தரவு!

கூட்டரசு நீதிமன்றம்: நஜிப் மீதான 42 மில்லியன் ரிங்கிட் வழக்கை தொடங்க உத்தரவு!

873
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தம் மீதான குற்றங்களை விசாரிப்பதில், இடையூறு அளிக்கும் வகையில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையிட்டிருப்பதாக தலைமை அரசாங்க வழங்கறிஞர் டோமி தோமஸ் குற்றம் கூறியிருந்தார்.

இந்நிலையில், நேற்று புதன்கிழமை, 1எம்டிபியின் முன்னாள் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இண்டர்நேஷனலுக்குச் சொந்தமான 42 மில்லியன் ரிங்கிட் தொடர்பான வழக்கில், அதன் விசாரணையை தொடங்குமாறு கூட்டரசு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ஏழு நீதிபதிகளை கொண்ட குழுவிற்கு தலைமை தாங்கிய டான்ஶ்ரீ ரிச்சார்ட் மலாஞ்சும் இந்த தீர்ப்பை வழங்கினார்.

முன்னதாக, பிப்ரவரி 12-இல் தொடங்கி மார்ச் 29 வரை நடக்க வேண்டியிருந்த இந்த வழக்கை இரு முறை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது.