Home வணிகம்/தொழில் நுட்பம் மலேசியாவில் உழைப்பிற்கேற்ற கூலி இல்லை!- தேசிய வங்கி

மலேசியாவில் உழைப்பிற்கேற்ற கூலி இல்லை!- தேசிய வங்கி

1605
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்நாட்டில் தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்யும் அளவிற்கு, அவர்களது வருமானம் இல்லை என தேசிய வங்கி வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை அரசாங்கம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் எனவும், தொழிலாளர் சட்டங்கள் மற்றும் தொழிலாளர் சந்தையை மேம்படுத்த அரசாங்கம் வழிகளைக் கண்டறிய வேண்டும் எனவும் அது குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் சிங்கப்பூர் ஊழியர்களுடன் ஒப்பிடுகையில், ஒரே மாதிரியான உற்பத்திக்கு, மூன்றில் ஒரு பங்கிற்கு குறைவாகவே மலேசிய தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதாக அது குறிப்பிட்டுள்ளது.

2018-ஆம் ஆண்டிற்கான தேசிய வங்கியின் வருடாந்திர அறிக்கையில் இது குறித்து வெளியிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மலேசிய ஊழியர் 1,000 அமெரிக்க டாலருக்கு (4,079 ரிங்கிட்) நிகரான உற்பத்தியை வெளியிட்டால், அந்த ஊழியருக்கு 340 அமெரிக்க டாலர் ஊதியம் (1,387 ரிங்கிட்) மட்டுமே வழங்கப்படுகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலேசியா பல்வேறு தொழிற்துறைகளில் ஆயிரக் கணக்கான தொழிலாளர்களைக் கொண்டிருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து 35.2 விழுக்காட்டிற்கும் குறைவாக தொழிலாளர்களுக்கு அத்தொழிற்துறைகள் ஊதியம் வழங்குவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.